சர்வதேச சந்தையில் தங்கம் விலை 37 டாலர்கள் குறைவுடன் வர்த்தகமாகி வருகிறது. இன்று 1 அவுன்ஸ் (28.35 கிராம்) தங்கம் $37.35 (இந்திய மதிப்பில் ரூ.3,507.56) குறைந்து $4,065.97 ஆகவும், வெள்ளி விலை $0.40 குறைந்து $51.95-க்கும் விற்பனையாகிறது. சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.13,160-க்கும், ஒரு சவரன் ரூ.1,05,280-க்கும் விற்கப்பட்டது. வெள்ளி ஒரு கிராம் ரூ.205-க்கும் விற்பனையானது. இந்த நிலையில் விடுமுறை நாள் என்பதால் இன்றும் தங்கம், வெள்ளி விலையில் மாற்றம் இருக்காது.