தமிழக முதலமைச்சர்
விஜய் தலைமையில் இன்று (நவ.25) நடைபெற்ற 2ஆவது வெற்றி முதலீட்டாளர்கள் மாநாட்டில், 78 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதன் மூலம் ரூ.58,214 கோடி புதிய முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதுடன், 65,786 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஏற்கெனவே கையெழுத்தான ஒப்பந்தங்களையும் சேர்த்து இதுவரை 190 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.1.75 லட்சம் கோடி முதலீடுகள் உறுதியளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.