அமெரிக்க இடைத்தேர்தலில் ஆளும் கட்சி சந்தித்த பின்னடைவுகளுக்கு மத்தியில், அதிபர் டிரம்பை கேலி செய்யும் வகையிலான செயற்கை நுண்ணறிவு (AI) வீடியோவை ஈரான் தூதரகம் பகிர்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க
அரசியல் நிலவரத்தை விமர்சிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த AI வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்வதேச அளவில் விவாதத்தை கிளப்பியுள்ளது. தேர்தல் பின்னடைவு மற்றும் இந்த வீடியோ வெளியீடு ஆகியவை அமெரிக்க-ஈரான் உறவில் மேலும் சலசலப்பை உருவாக்கியுள்ளன.