மல்லிகைப் பூ விலை உயர்வு: பொதுமக்கள் கவலை

10பார்த்தது
மல்லிகைப் பூ விலை உயர்வு: பொதுமக்கள் கவலை
தென் தமிழகத்தின் புகழ்பெற்ற தோவாளை பூச்சந்தைக்குத் தொடர் மழை காரணமாகப் பூக்களின் வரத்து வெகுவாகக் குறைந்துள்ளது. இதன் எதிரொலியாக பூக்களின் விலை இருமடங்கு உயர்ந்துள்ளது. நேற்று வரை கிலோ ரூ.1,000-க்கு விற்கப்பட்ட மல்லிகைப் பூ இன்று ரூ.2,000-ஆகவும், பிச்சிப் பூ கிலோ ரூ.2,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தீபாவளி பண்டிகை நேரத்தில் தமிழகம் முழுவதும் பல இடங்களில் பூக்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளதால் சுப நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் பொதுமக்களும் பெரும் கவலையடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி