சென்னை கோயம்பேடு பள்ளிவாசல் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள மமக தலைவர் ஜவாஹிருல்லா MLA, இச்சம்பவம் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைத்து விசாரிக்க வலியுறுத்தியுள்ளார். இத்தாக்குதலின் பின்னணியிலுள்ள நோக்கம் மற்றும் திட்டமிடலை கண்டறிவதுடன், வழிபாட்டு தலங்கள் மீதான தாக்குதல்களைத் தடுக்கத் தமிழ்நாடு அரசு உறுதியான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.