மூளை, இதயம் மற்றும் எலும்புகள் எதுவுமின்றி சுமார் 95% நீரால் ஆன உடலமைப்பை கொண்ட ஜெல்லி மீன்கள், டைனோசர்கள் தோன்றுவதற்கு பல நூறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே பூமியில் தோன்றியவை ஆகும். இவை, நரம்பு வலைப்பின்னல் மூலம் செயல்படுவதோடு, சில வகைகள் இருட்டில் தானாக ஒளிரும் தன்மையும் கொண்டுள்ளன. மேலும், வயதாகும்போது மீண்டும் இளமைப் பருவத்திற்குத் திரும்பும் திறன் கொண்ட 'டூரிட்டோப்சிஸ் டோர்னி' வகை ஜெல்லி மீன்கள் ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளன.