டிசிஎஸ் நிறுவனம் 2026-ல் பிஎஸ்சி, பிசிஏ முடிக்கும் மாணவர்களுக்காக 'TCS B.Sc Ignite' ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 18-28 வயதினர் 'NextStep' போர்ட்டலில் ஜூலை 22-க்குள் விண்ணப்பிக்கலாம். தேர்வு ஆகஸ்ட் 26 அன்று மையங்களில் நடக்கும். தேர்வாகும் நபர்களுக்கு AI, Cloud போன்ற தொழில்நுட்பங்களில் பயிற்சியுடன், முன்னணிப் பல்கலைகளில் PG படிக்கும் வாய்ப்பும் வழங்கப்படும்.