பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு அழைப்பிதழை சன் டிவி குழுமத் தலைவர் கலாநிதி மாறன் வழங்கினார். உடன் காவேரி கலாநிதி, அனிருத் ரவிச்சந்தரின் பெற்றோர் லட்சுமி, ரவிச்சந்தர் ஆகியோர் உடன் இருந்தனர். வரும் நவ., 21ஆம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை ஐடிசி ஹோட்டலில் நடைபெறவுள்ள நிலையில், முக்கிய பிரமுகர்களுக்கு நேரில் அழைப்பு விடுத்து வருகின்றனர்.