
சிக்கிமில் 40 பனிப்பாறை ஏரிகளில் வெடிப்பு அபாயம்
சிக்கிம் மாநிலத்தில் திடீர் வெள்ள பெருக்கை ஏற்படுத்தக்கூடிய 'வகை A' பிரிவை சேர்ந்த 16 ஏரிகள் உட்பட 40 அதிக ஆபத்துள்ள பனிப்பாறை ஏரிகளை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அடையாளம் கண்டுள்ளது. இதில் குறிப்பாக 'ஷாகோ சோ' ஏரி அதிக ஆபத்துள்ள பகுதியாகக் கண்டறியப்பட்டுள்ள நிலையில், பேரழிவுகளைத் தடுக்கச் செயற்கைக்கோள் கண்காணிப்பு மற்றும் நாட்டின் முதல் பிரத்யேகத் தணிப்பு நெறிமுறையை அம்மாநில அரசு தீவிரமாக உருவாக்கி வருகிறது.






























