
பிறப்புறுப்பு சிதைக்கப்பட்ட நிலையில் துறவி தற்கொலை
உத்தரப்பிரதேசத்தின் பிருந்தாவனத்தில் உள்ள ஆசிரமக் கட்டிடத்திலிருந்து குதித்து உயிரிழந்த துறவி பிரேமானந்த மகாராஜின் சீடர் ரஷிக் துலாரி சரண் விவகாரத்தில் காவல்துறை குழப்பமடைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ரஷிக் தனது ஆடைகளில் ரத்தக்கறைகளுடன் கட்டிடத்தின் 4வது மாடியிலிருந்து குதித்துள்ளார். பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவரது ஆணுறுப்பு காயம்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. ஆடைகளில் இருந்த ரத்தக்கறைக்கு இதுவே காரணம் என காவல்துறை கூறுகிறது. தொடர் விசாரணை தீவிரமடைந்துள்ளது.




