
உளுந்தூர்பேட்டை டீ கடையில் ஹான்ஸ் விற்றவர் கைது
உளுந்தூர்பேட்டை அடுத்த ஓலையனூர் டீக்கடையில் ஹான்ஸ் விற்பனை நடப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சோதனையிட்டனர். இதில், பிரம்மதேசம் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் (26) என்பவர் டீக்கடையில் இருந்து 25 கிலோ ஹான்ஸ் பறிமுதல் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான கடை உரிமையாளர் கோவிந்தன் (38) என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.







