
பிரபாஸின் ‘தி ராஜா சாப்’ தோல்விக்கு இதுதான் காரணம்.. தயாரிப்பாளர் விளக்கம்
நடிகர் பிரபாஸ் நடிப்பில் மாருதி இயக்கத்தில் வெளியான ‘தி ராஜா சாப்’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. சுமார் ரூ.400 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவானதாகக் கூறப்படும் இப்படம், உலகளவில் சுமார் ரூ.208 கோடி வசூலித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், படத்தின் தோல்விக்கான காரணங்கள் குறித்து தயாரிப்பாளர் டி.ஜி. விஸ்வ பிரசாத் பேசியுள்ளார். பொங்கல் பண்டிகை காலத்தில் படத்தை வெளியிட்டது முக்கியத் தவறு என்றும், வேறு நேரத்தில் வெளியிட்டிருந்தால் முடிவு மாறியிருக்கலாம் என்றார்.































