
வடமாநில சாதுக்கள் ஊர்வலம், காஞ்சி மடாதிபதி தொடக்கி வைத்தார்
காஞ்சிபுரம் அன்னை இந்திரா காந்தி சாலையில் உள்ள உதாசின் பாவாஜி மடத்தின் பீடாதிபதி கர்ஷினி அனுபவானந்த், வரும் ஜூலை 9ம் தேதி முதல் நான்கு மாதங்களுக்கு சாதுர்மாஸ்ய விரதத்தை தொடங்க உள்ளார். அவருடன் வடமாநிலங்களைச் சேர்ந்த 100 சாதுக்களும் விரதத்தில் பங்கேற்கின்றனர். இதற்காக, கர்ஷினி அனுபவானந்த் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் காஞ்சி சங்கர மடத்திலிருந்து காமாட்சி அம்மன் கோயில் வழியாக நேற்று (ஜூன் 28) உதாசின் பாவாஜி மடத்திற்கு வந்தனர். காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி ஶ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் 6 அடி நீள வேல் வழங்கி இந்த ஊர்வலத்தைத் தொடங்கி வைத்தார்.
















