
செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்த பாஜக பயிற்சி பட்டறை
செங்கல்பட்டு தெற்கு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் வடக்கு - தெற்கு மண்டல் பாஜக சார்பில் "பண்டிட் தீனதயாள் உபாத்யாயா" பயிற்சிப் பட்டறை இராமாபுரம் வி. எம். ஆர். திருமண மண்டபத்தில் நேற்று (ஜூன். 28) மாலை நடைபெற்றது. செங்கல்பட்டு தெற்கு மாவட்ட பாஜக தலைவர் பிரவீன்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பாஜகவின் எதிர்கால அரசியல் குறித்து நிர்வாகிகள் விவாதித்தனர்.






















