
லயன்ஸ் கிளப் சார்பில் மேடவாக்கம் பள்ளியில் பிங்க் டாய்லெட்
சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட மேடவாக்கம் (வெள்ளக்கல்) அரசு மேல்நிலைப்பள்ளியில், சுப்ரீம் அரிமா சங்கம் சார்பில் பிங்க் டாய்லெட் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று (ஜூன். 30) காலை நடைபெற்றது. இதில் அரிமா சங்க கவர்னர் மணிசேகர், துணை ஆளுநர் ஜெயக்கொடி, முன்னாள் கவர்னர் ஶ்ரீதர், மேடவாக்கம் சுப்ரீம் அரிமா சங்க தலைவர் ராமலிங்கம், மண்டல தலைவர் சத்ரியன் குமார், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி பள்ளி மாணவர்களின் நலனை மேம்படுத்தும் நோக்கில் நடைபெற்றது.






































