
மின் புகார்களுக்கு உடனடி தீர்வு வழங்க 'TNEB சாட்பாட்' சேவை அறிமுகம்
தமிழகத்தில் மின் நுகர்வோரின் புகார்களை அதிகாரிகளிடம் காலதாமதமின்றி கொண்டு சேர்க்கும் வகையில் 'TNEB CHATBOT' எனும் புதிய வாட்ஸ்அப் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இச்சேவையின் மூலம் பொதுமக்கள் மின் கட்டணம், மின் தடை போன்ற புகார்களை 24 மணி நேரமும் இயங்கும் 94987 94987 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பி உடனடியாக பதிவு செய்ய முடியும். புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து நுகர்வோரின் சிரமங்களை குறைப்பதே இச்சேவையின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



























