ரூ.3.24 லட்சத்தில் கவாஸாகி இசட்300 பைக் அறிமுகம்

0பார்த்தது
ரூ.3.24 லட்சத்தில் கவாஸாகி இசட்300 பைக் அறிமுகம்
கவாஸாகி நிறுவனம் தனது புதிய இசட்300 (Kawasaki Z300) பைக்கை இந்தியாவில் ரூ.3.24 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்துள்ளது. நின்ஜா 300 பைக்கின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இதில், 296 சிசி இரட்டை சிலிண்டர், திரவக் குளிர்விப்பு எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 39.4 பிஎச்பி சக்தியையும், 26.3 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 வேக கியர்பாக்ஸ், ஸ்லிப் அண்ட் அசிஸ்ட் கிளட்ச், டூயல் சேனல் ஏபிஎஸ் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. 17 லிட்டர் பெட்ரோல் டேங்க் கொண்ட இந்த பைக் 175 கிலோ எடை உடையது.

தொடர்புடைய செய்தி