கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர். "அறத்தை வளர்ப்பதே நமது கடமை என்ற உயரிய குறிக்கோளுடன் அனைவரும் ஒன்றிணைந்து வாழ வேண்டும்; அன்பு, அமைதி, மகிழ்ச்சி பெருகட்டும்" என எடப்பாடி பழனிசாமியும், "நீதியை நிலைநாட்டி தமிழகத்தில் வளம், அன்பு, அறம் செழிக்க வேண்டும்" என அன்புமணியும் தங்கள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.