
நாங்கள் திமுகவிடம் பேசியதாக கூறுவது தவறு - டிடிவி தினகரன்
எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்க, விஜய்யிடம் ஆதரவு கேட்க இருந்ததாகவும், நாங்கள் திமுகவிடம் பேசியதாக கூறுவது தவறு என்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மதுராந்தகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், எங்களிடம் இருந்த 25 எம்எல்ஏக்களை உங்கள் பக்கம் இழுத்தீர்களே, நீங்கள் சொல்வது தவறு. நாங்கள் ஆட்சியமைக்க ஆதரவு தர கேட்கலாம் என இருந்தோம். திமுகவிடம் பேசியதற்கு பின்னால் பாஜக இருந்ததாக சொல்வது தவறு. இதற்கு நானே சாட்சி என்றார்.




