திமுக தலைவர்
மு.க.ஸ்டாலின் ஆட்சியில் அமைதிப் பூங்காவாக இருந்த தமிழகத்தில் தற்போது சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தீபாவளியன்று மட்டும் மாநிலத்தில் 9 பேர் கொலை செய்யப்பட்டுள்ள செய்திகள் அதிர்ச்சியளிப்பதாகக் கூறியுள்ள அவர், தமிழக மக்களையும் காவல்துறையினரையும் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் அரசு உடனடியாக முழுக் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.