வாக்காளர்களுக்கு பெட்டி பெட்டியாக மதுபானம் சப்ளை

2419பார்த்தது
வாக்காளர்களுக்கு பெட்டி பெட்டியாக மதுபானம் சப்ளை
கன்னியாகுமரி கிள்ளியூர் தொகுதியில் மூட்டை மூட்டையாக மதுபானத்தை பதுக்கி வைத்து வாக்காளர்களுக்கு விநியோகித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. தேர்தல் தோல்வி பயத்தில் கிள்ளியூர் காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ் குமார் வாக்காளர்களை திசை திருப்பி விதிமீறலில் ஈடுபட்டுள்ளதாக அந்த தொகுதியின் நாதக வேட்பாளர் ஹிம்லர் குற்றம்சாட்டியுள்ளார். அதே போல், திருச்சி முசிறி பகுதியில் கள்ளச் சந்தையில் மதுபானம் விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். டாஸ்மாக் கடைகள் 3 நாட்கள் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி