
அமெரிக்காவில் வாக்குவாதம் கொலையில் முடிந்தது: திருநங்கை கைது!
சிகாகோவில் பெண்களுக்கான கழிவறையைப் பயன்படுத்திய விவகாரத்தில் ஏற்பட்ட பாலின வாக்குவாதத்தைத் தொடர்ந்து, கெல்லி டே என்ற திருநங்கை 50 வயது நபரை 13 முறை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். இத்தாக்குதலில் கத்தியின் முனை பாதிக்கப்பட்டவரின் மண்டை ஓட்டிற்குள் உடைந்து சிக்கியதாக நியூயார்க் போஸ்ட் தெரிவித்துள்ளது. இக்கொடூர சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து அந்நாட்டுப் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






























