
மதுரையில் தவெக மாநாடு: வெயில் 106 டிகிரி ஃபாரன்ஹீட்
மதுரை மாவட்டம் பாரபத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு இன்று நடைபெறுகிறது. இந்நிலையில், இப்பகுதியில் வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக காணப்படுகிறது. 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடுமையான இந்த வெப்பத்தைச் சமாளரிக்க முடியாமல் நிழல் தேடி தொண்டர்கள் அலையும் சூழல் ஏற்பட்டுள்ளது.















