
மேடைக்கு வந்த விஜய்: தொண்டர்களை நடந்து சென்று சந்தித்தார்
தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநாடு மதுரையில் நடைபெற்றுவருகிறது. சற்றுமுன் மாநாடு மேடைக்கு வெள்ளை சட்டையில் வந்த தவெக தலைவர் விஜய் தனது பெற்றோர் எஸ்.வி.சந்திரசேகர், ஷோபாவை கட்டித்தழுவி ஆசி பெற்றார். நிர்வாகிகளுக்கு வணக்கம் வைத்தபின், தொண்டர்களை நடந்து சென்று சந்தித்தார்.
















