
மதுரை: 680 போதை மாத்திரைகளுடன் 6 பேர் கைது
மதுரை செக்கானூரணியில் போலீசார் ரோந்து பணியின்போது ஹூண்டாய் வெர்னா காரில் வந்த 6 வாலிபர்களை சோதனையிட்டனர். விசாரணையில், ஆன்லைன் செயலி மூலம் போதை மாத்திரைகளை ஆர்டர் செய்து கூரியர் மூலம் பெற்று விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. ராமநாதபுரம் மற்றும் மதுரையைச் சேர்ந்த சிபியோன்ராஜ், லோகபாண்டி, நந்தகுமார், தேனவன், சுபாஷ், விஷால் ஆகிய 6 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 680 போதை மாத்திரைகள், ஒரு ஏர் பிஸ்டல், 11 வாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
















