ஒடிசா மாநிலம் சம்பல்பூர் மாவட்டத்தில் சாலையில் இறந்து கிடந்த நாயின் இறைச்சியை நபர் ஒருவர் உண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. நாயின் உடலுக்கு அருகில் அமர்ந்தவாறு அவர் இறைச்சியை உண்பதை கண்ட பொதுமக்கள், அவரை தடுக்க முயன்றும் அது முடியாமல் போனது. இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ள நிலையில், இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.