பெண் மீது அரிக்கும் தன்மையுள்ள திரவத்தை ஊற்றிய ஆசாமி

3570பார்த்தது
பெண் மீது அரிக்கும் தன்மையுள்ள திரவத்தை ஊற்றிய ஆசாமி
டெல்லியின் கோண்டா சௌக் அருகே, நேற்று காலை வேலைக்குச் சென்று கொண்டிருந்த 24 வயது இளம்பெண் மீது 41 வயது நபர் அரிக்கும் தன்மையுடைய திரவத்தை ஊற்றி தாக்குதல் நடத்தியுள்ளார். 6 மாதங்களாக அப்பெண்ணுக்கு அறிமுகமான நபர் இத்தாக்குதலை நடத்தியதாகவும், தாக்குதலுக்குப் பிறகு தப்பியோடிய அவர் பின்னர் கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. காயமடைந்த பெண் ஜிடிபி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். குற்றவாளியிடம் இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி