தம்பி சூரி மிகப்பெரிய சம்பவம் செய்திருக்கிறாய் - சமுத்திரக்கனி

3116பார்த்தது
தம்பி சூரி மிகப்பெரிய சம்பவம் செய்திருக்கிறாய் - சமுத்திரக்கனி
மதிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து வெளியான 'மண்டாடி' திரைப்படம் உலக அளவில் 6 நாட்களில் ரூ.70 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. மீனவர்களின் வாழ்க்கை மற்றும் படகு போட்டியை மையமாக கொண்டு உருவான இப்படத்தில் சூரியின் நடிப்பு குறித்து பலரும் பாராட்டி வரும் நிலையில், நடிகரும், இயக்குநருமான சமுத்திரக்கனியும் அவரை வாழ்த்தியுள்ளார். "தம்பி சூரி மிகப்பெரிய சம்பவம் செய்திருக்கிறாய், மீண்டும் மீண்டும் நீ வெல்ல வேண்டும்" என தனது சமூக வலைதள பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி