டெல்லி ஷாதரா மாவட்டம் விஷ்வாஸ் நகரில் உள்ள 11-வது தெருவில், வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும், 2 பேர் தீக்காயமடைந்தனர். கட்டிடத்தின் தரைத்தளத்தில் ரிக்ஷாக்களுக்கு சார்ஜ் செய்யும் மையம் செயல்பட்டு வந்தது. இன்று (நவ.29) அதிகாலை 4.15 மணிக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, 4 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. காலை 5 மணியளவில் தீ முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.