தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட நாதக வேட்பாளர் கார்த்திகா, அவரது கணவர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில், தாராபுரம் மருத்துவமனையில் கார்த்திகாவுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. தேர்தல் பரப்புரையின்போது போராட்டத்தில் ஈடுபட்டு காவல்துறையினரை மிரட்டியதாக இன்று காலையில் கோவையில் வைத்து கைதானார். அதே போல், நாதக முக்கிய நிர்வாகிகள் சிலரும் கைது செய்யப்பட்டுள்ளதால், எதிர்க்கட்சியினர் ஆளும் தவெக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.