எம்.ஜி.ஆர். சொத்துக்கு உரிமை கோரிய வழக்கு தள்ளுபடி

3546பார்த்தது
திருச்சியில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர்-ன் சொத்துக்கு உரிமை கோரி, அவரது மனைவி ஜானகியின் மகன் சுரேந்திரன் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த வழக்கில் உரிய ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களுடன் சம்பந்தப்பட்ட உரிமையியல் நீதிமன்றத்தை நாட மனுதாரருக்கு அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, எம்ஜிஆர்-ன் சொத்து தொடர்பான உரிமையை நிலைநாட்ட உரிய ஆவணங்களுடன் சிவில் நீதிமன்றத்தை அணுகும் வாய்ப்பு சுரேந்திரனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி