உலகளவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சர்வர்கள் திடீரென முடங்கியதால், மின்னஞ்சல், மைக்ரோசாப்ட் டீம்ஸ், கோபைலட், மைக்ரோசாப்ட் 365 தொகுப்பின் வேர்ட், எக்செல் போன்ற முக்கிய சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. வழக்கமான அப்டேட்டின் போது ஏற்பட்ட கட்டமைப்பு பிழையே இந்த பாதிப்புக்குக் காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. இது சைபர் தாக்குதல் அல்ல என்றும், பயனர்களின் தரவுகள் பாதுகாப்பாக இருப்பதாகவும் மைக்ரோசாப்ட் உறுதிப்படுத்தியுள்ளது. பொறியாளர்கள் சேவைகளைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.