அஸ்ஸாம் மாநிலம் கம்ரூப் மாவட்டத்தில் இன்று (நவ. 14) பிற்பகல் 2.43 மணியளவில் லேசான
நிலநடுக்கம் ஏற்பட்டது. தேசிய நில அதிர்வு ஆய்வு மையத்தின் தகவலின்படி, பூமிக்கடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த
நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4 ஆகப் பதிவாகியுள்ளது. திடீர் நில அதிர்வால் அப்பகுதி மக்கள் பீதியடைந்த நிலையில், இதனால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.