விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் புகழ்பெற்ற பால்கோவா விலை இன்று முதல் விலை உயர்வு அமலுக்கு வருகிறது. ஒரு கிலோ பால் கோவாவின் விலை ரூ.360-ல் இருந்து ரூ.400 ஆகவும், பால் அல்வாவின் விலை ரூ.400-ல் இருந்து ரூ.450 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. பால் கேக் மற்றும் திரட்டி பால் போன்ற பொருட்களின் விலையும் கிலோவுக்கு ரூ.50 வரை உயர்ந்துள்ளது. சர்க்கரை விலை உயர்வால் இந்த திடீர் விலை ஏற்றம் செய்யப்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.