ராஜஸ்தானின் கோட்டா மாவட்டத்தில் உள்ள டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் 25-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற மினி பஸ் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து 15 அடி உயரத்திலிருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இன்று (அக்.17) காலை 6 மணியளவில் நடைபெற்ற இந்த விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கால்வாயில் நீர் மற்றும் சேறு அதிகமாக இருப்பதால் மீட்பு பணிகள் பாதிக்கப்பட்ட நிலையில், கிரேன் உதவியுடன் பயணிகளை மீட்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.