மாயமான புதுப்பெண் 8 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு

4494பார்த்தது
மாயமான புதுப்பெண் 8 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு
கர்நாடக மாநிலம் ஹாசன் அருகே ஹேமாவதி கால்வாயில் குதித்து மாயமான புதுப்பெண் பிரியங்காவின் உடல், 8 நாட்களுக்குப் பிறகு அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. தன் மகளைக் கணவர் ராஜசேகர்தான் தள்ளிக் கொன்றதாகப் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால், பிரியங்காவுக்கு ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்துவிட்டதாகக் கணவர் தரப்பு கூறுகிறது. உடலைக் கைப்பற்றிய போலீஸார், இது தற்கொலையா அல்லது கொலையா எனத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி