அமைச்சர் ஆனந்துடன் MLA சுனில் ஆனந்த் சந்திப்பு

19பார்த்தது
அமைச்சர் ஆனந்துடன் MLA சுனில் ஆனந்த் சந்திப்பு
அமைச்சர் ஆனந்தை, மேட்டுப்பாளையம் MLA என்.சுனில் ஆனந்த் மற்றும் மாவட்ட செயலாளர் வி.ராஜ்குமார் ஆகியோர் இன்று (நவ.23) நேரில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது மேட்டுப்பாளையம் மற்றும் தொண்டாமுத்தூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் செயல்படுத்தப்பட வேண்டிய புதிய வளர்ச்சி திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மேலும், இரு தொகுதிகளிலும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை விரைந்து மேம்படுத்துவது தொடர்பாகவும் அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி