தவெக கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ வி.எஸ்.பாபு மறைவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், தமிழக முதலமைச்சர்
விஜய், பாபு நலம்பெற வேண்டும் என்று விரும்பிய நிலையில், மருத்துவர்கள் எவ்வளவோ உயர் சிகிச்சை தந்தும் அது பலனிக்காமல் உயிர் நீத்தார். சகோதரர் பாபுவை இழந்து துயரத்தில் தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.