திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக சென்ற காரின் முன்பகுதி போனட் மீது குரங்கு ஒன்று ஜாலியாக அமர்ந்து சவாரி செய்த காட்சி அப்பகுதி வழியே சென்ற வாகன ஓட்டிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. காருக்குள் இருப்பவர்கள் விரட்ட முயன்றும் நகராமல், அந்த குரங்கு காரின் மீது அமர்ந்து பயணித்த காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது.