சீன பாலைவன பகுதியில் 500-க்கும் மேற்பட்ட ஒட்டகங்கள் அணிவகுத்தபடி இடம்பெயரும் காட்சிகள் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளன. அப்பகுதியில் குளிர்காலம் தொடங்கியுள்ளதால், ஒட்டகங்களுக்கு தேவையான தீவனம் மற்றும் நீர் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் மேய்ப்பர்கள் அவற்றை புதிய மேய்ச்சல் நிலங்களுக்கு அழைத்து செல்கின்றனர். பருவகால மாற்றத்திற்கு ஏற்ப மேற்கொள்ளப்படும் இந்த இடம்பெயர்வு பயணம், பாலைவன பகுதியின் இயற்கை சூழலையும் மேய்ப்பர்களின் வாழ்வாதாரத்தையும் பிரதிபலிக்கிறது.