முதலமைச்சர் விஜயை முன்னிறுத்தி பவர் செண்டரில் இருப்பவர்கள் செயல்படுவதாகக் கூறி, தவெக ஆட்சியை
மு.க.ஸ்டாலின் விமர்சித்தார். மேலும், “ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில் மின்வெட்டு ஏற்பட்டு மக்கள் குடும்பத்துடன் சாலையில் போராடும் நிலை உருவாகியுள்ளது. தமிழகத்தில் கொலைகள் அதிகரிப்பதாகவும், போதைப்பொருள் ஒழிப்பதாகக் கூறும் கட்சியினரே விற்பனையில் ஈடுபடுகிறது. சிறுமிகள் மாயம் மற்றும் பாலியல் வழக்குகளில் தவெகவினரே சிக்குகின்றனர்” என்றார்.