நாகையில் தவெக நிர்வாகியிடம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், மத்திய புலனாய்வு அமைப்புகளுக்கு DRI தகவல் அனுப்பியுள்ளது. இதில் சர்வதேச அளவில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை ஏதேனும் நடந்துள்ளதா என்பது குறித்து அமலாக்கத்துறையும் (ED), பயங்கரவாத அமைப்புகளின் தொடர்புகள் உள்ளதா என்பது குறித்து தேசியப் புலனாய்வு முகமையும் (NIA) விரைவில் விசாரிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.