
உரோமங்கள் இல்லாத விசித்திரமான பூனைகள் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!
ஸ்பிங்க்ஸ் எனப்படும் முடியில்லா பூனைகள் தங்களின் தோலில் உரோமங்கள் இல்லாத விசித்திரமான தோற்றத்தை கொண்டுள்ளது. உரோமங்கள் இல்லாததால் இவற்றுக்கு உடல் சூட்டை பராமரிக்க அதிக ஆற்றல் தேவைப்படுவதோடு, வழக்கமான பூனைகளை விட அதிக உணவு உண்ணும் பண்பையும் கொண்டுள்ளன. மேலும், சருமத்தில் எண்ணெய் பசிவு அதிகமிருப்பினும், மிக அன்பாகவும் மனிதர்களுடன் எளிதில் பழகக்கூடிய சுபாவத்துடனும் இவை விளங்குகின்றன.





























