போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை

83பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் உள்ள பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வடிவேலன் என்பவரது நிலங்களை சிபிஎம் கட்சியைச் சேர்ந்த பலர் சட்டவிரோதமாக ஆக்கிரமித்ததாகக் கூறப்படுகிறது. நீதிமன்ற உத்தரவின்படி நிலத்தை அளந்து தராமல் அதிகாரிகள் காலதாமதம் செய்ததால் விரக்தியடைந்த விவசாயி, உயர் மின் கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றார். இதைத் தொடர்ந்து பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

தொடர்புடைய செய்தி