
நாகையில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவான நிலையில், துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. நாகை, சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய 7 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதேபோல் பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.





