தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவின் 100வது படமான 'கிங் 100' படத்தில், நடிகர் அசோக் செல்வன் வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரா. கார்த்தி இயக்கும் இந்தப் படத்தில் தபு, ஐஸ்வர்யா ராஜேஷ், சுஷ்மிதா பட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம், டிசம்பர் 24 அன்று கிறிஸ்துமஸ் வெளியீடாக பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடையே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.