
சின்னார்பாளையத்தில் புகையிலை விற்றவர் கைது
நாமக்கல் மாவட்டம்,வெப்படை அருகே உள்ள சின்னார்பாளையம் பகுதியில் பேக்கரி அருகே ஒருவர் நேற்று கையில் பையுடன் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தார். அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வெப்படை போலீசார், அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, பையில் 5 கிலோ புகையிலை பொருட்களை, விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரைணையில், பள்ளிப்பாளையம், அணிமூர் பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு, 31 என்பது தெரியவந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்து, 5 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.














