வங்கக் கடலில் புதிய புயல் உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, நாளை (நவ.13) வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக உள்ளது. இது நவம்பர் 15ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, பின்னர் புயலாக மாற வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கக் கடல் பகுதியில் இந்தப் புயல் உருவாகக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய புயலுக்கு ஈரான் பரிந்துரைத்துள்ள 'அக்வான்' என்ற பெயர் சூட்டப்பட உள்ளது. அக்வான் என்றால் '
அசுரன்' என்று பொருள்.