பஜாஜ் ஆட்டோ நிறுவனம் புதிய பல்சர் N250 SS பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1,59,406 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 249 சிசி நான்கு வால்வு எஞ்சின், 25 PS பவர், 22 Nm டார்க் மற்றும் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளன. மேலும், குயிக் ஷிஃப்டர், 5 அங்குல TFT திரை, கூகுள் மேப்ஸ் வசதி, ரைடிங் மோடுகள், USB Type-C சார்ஜிங் உள்ளிட்ட சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.