புதிய தலைமைச் செயலக விவகாரம்.. கூட்டம் ஒத்திவைப்பு

1பார்த்தது
புதிய தலைமைச் செயலக விவகாரம்.. கூட்டம் ஒத்திவைப்பு
சென்னை பட்டினப்பாக்கத்தில் ரூ.1,200 கோடி செலவில் 20 லட்சம் சதுரஅடியில் புதிய சட்டமன்றம், தலைமைச் செயலகம் கட்ட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்குப் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அங்குள்ள பழைய கட்டடங்களை இடிக்கத் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக இன்று நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை, மயிலை அனைத்து மீனவ கிராம பஞ்சாயத்து தரப்பில் முறையான அழைப்பு வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டதால், வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி